ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம்ரேஸ் இன்ஸ்டிடியூட் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி அக்டோபர் 20-ம் தேதி தொடக்கம் | டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சியை ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக ரேஸ் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: இது போட்டித் தேர்வுகள் நேரம். இன்று (15-ம் தேதி) ஒருநாள் மட்டும் 5 போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. சில மாணவர்கள் இன்று ஒரே நாளில் இரண்டு, மூன்று தேர்வுகளை எழுதுவார்கள். ஆர்ஆர்பி அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட தேர்வுகளுக்கான முடிவுகளை, வங்கித் தேர்வுகளை நடத்தும் ஐபிபீஎஸ் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதில், சென்னை தி.நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரேஸ் கோச்சிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் படித்த 4,954 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இது, நாட்டில் வேறு எந்த பயிற்சி நிறுவனமும் படைக்காத சாதனை. இது மட்டுமின்றி, எங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தமிழக மாணவர்கள் பலரும் சிபிஐ உதவி ஆய்வாளர், வரி அதிகாரி உட்பட மத்திய அரசில் பல உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து மத்திய பணிக் குச் செல்வது அரிதாக இருந்த சூழலில், ரேஸ் நிறுவனம் அதை சாத்தியமாக்கியுள்ளது. இந்நிலையில், ரேஸ் நிறுவனம் இந்த மாதம் முதல் மாநில அரசுப் பணிக்கும்(டிஎன்பிஎஸ்சி) மாணவர்களை அனுப்பும் பணியைத் தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அளிக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இப்பயிற்சி வகுப்புகள் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு


அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு | பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்து வரும் வல்லுனர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரும், சிறந்த பொருளாதார வல்லுனருமான ரிச்சர்டு தாலர் (வயது 72) தட்டிச் சென்றுள்ளார். பொருளாதாரத்தின் உளவியல் குறித்த தாலரின் புரிதலுக்காகவும், பொருளாதாரத்தில் அவரது சிறந்த பணிக்காகவும் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது. மனிதனின் குணாதிசயங்கள் தனிமனித முடிவுகளையும், சந்தை விளைவுகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தாலரின் பணிநிலை காட்டுவதாக சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறியுள்ளது. பொருளாதார முடிவுகளை எடுக்கும் களத்தில் உளவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும், நடத்தை பொருளாதாரத்தின் முன்னோடி தாலர் என இந்த அகாடமி புகழாரம் சூட்டியுள்ளது. பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது மக்கள் எப்படி சிந்தித்து செயல்படுகிறார்கள்? என்பது குறித்து யதார்த்தமான பகுப்பாய்வுகளை இது ஒருங்கிணைக்கிறது என்றும் அந்த அகாடமியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முன்னதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் என 'கிளாரிவேட் அனாலிடிக்ஸ்' அமைப்பு வெளியிட்டு இருந்த பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனின் பெயரும் இடம் பெற்று இருந்தது. தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ரகுராம் ராஜனுக்கு இந்த பரிசு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிச்சர்டு தாலருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்


TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு அக். 20-ம் தேதி முதல் நேர்காணல் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் நீண்ட நாட்களாகியும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 2-ல் அடங்கிய துணை வணிகவரி அலுவலர், 2-ம் நிலை சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர், இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 வகையான பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2,169 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

GK IN TAMIL | வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.


1. மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு எது?
2. வெள்ளையாக இருப்பவர்களைவிட, கறுப்பாக இருப்பவர்கள் வெயிலால் தோல் சார்ந்து ஏற்படும் பிரச்சினைகளைக் குறைவாகவே சந்திப்பார்கள். நம் தோலுக்கும் முடிக்கும் நிறத்தைத் தந்து பாதுகாக்கும் அந்தப் பொருளின் பெயர் என்ன?
3. நாம் பிறக்கும்போது இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் வளர்ந்த பிறகு இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்குமா? வித்தியாசமாக இருக்குமென்றால் அதற்குக் காரணம் என்ன?
4. நமது உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206. இவற்றில் கிட்டத்தட்ட பாதி அதாவது நூற்றுக்கணக்கான எலும்புகளைப் பெற்றிருக்கும் இரண்டு உறுப்புகள் எவை?
5. நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் வளராமல் ஒரே அளவில் இருக்கும் உறுப்பு எது?
6. மனித உடல் சமநிலையில் இருப்பதற்கு எந்த உறுப்பு பெரிதும் பங்காற்றுகிறது?
7. நமது உடலின் மொத்தச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் தலைமைச் செயலகம் போலச் செயல்படும் மூளையின் சராசரி எடை என்ன?
8. நாம் உள்ளிழுக்கும் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் ரத்தமே உடலெங்கும் எடுத்துச் செல்கிறது. விபத்தில் ரத்த இழப்பு ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படுவதற்கு இதுவே காரணம். சரி, மனித உடலின் எடையில் ரத்தத்தின் அளவு மொத்தம் எத்தனை சதவீதம்?
9. ஒவ்வொரு சுவையை உணர்வதற்கு உதவிபுரியும் உறுப்பான நாக்கில் இருக்கும் சுவைமொட்டுகள் நாயைவிடவும், பூனையைவிடவும் மனிதர்களுக்கு அதிகம். நம் நாக்கில் உள்ள சராசரி சுவை மொட்டுகளின் எண்ணிக்கை என்ன?
10. உள்ளுறுப்புகளின் அடிப்படையில் பூச்சிகளின் உடலுக்கும் மனித உடலுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன? அந்த வகையில் மனிதர்களுக்கு உள்ள முக்கிய உள்ளுறுப்பு எது?

விடைகள்

1. தோல். மனித உடலை முழுவதும் போர்த்தி மூடியிருக்கும் தோலும் ஒரு உடல் உறுப்பே. சராசரி அளவு 20 சதுர அடி.
2. மெலனின். உடலில் இதன் அளவு அதிகரித்தால் கறுப்பாகவும், குறைந்தால் வெள்ளையாகவும் ஆகும்.
3. பிறக்கும்போது 270, வளர்ந்த பிறகு 206. வளர்ச்சியின்போது பல எலும்புகள் இணைந்துவிடுவதே காரணம்.
4. கால்களும் கைகளும்
5. கண் கருவிழிப் படலம் (Cornea)
6. உட்காதில் அமைந்திருக்கும் வெஸ்டிபுலார் அமைப்பு (Vestibular system). இதில் பிரச்சினை ஏற்பட்டால் நேராக நிற்கவோ, நடக்கவோ முடியாது.
7. 1.5 கிலோ
8. 7 சதவீதம். கிட்டத்தட்ட 4.5 - 5.5 லிட்டர்.
9. 5000
10. பூச்சிகளுக்கு ரத்தக்குழாய்கள் கிடையாது, மனிதர்களுக்கு உண்டு. அவற்றின் உடலில் உள்ளுறுப்புகள் ரத்தத்தில் மிதந்துகொண்டிருக்கும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன


குரூப் 4-ல் 3,682 பணியிடங்கள் நிரப்பப்பட்டன டிஎன்பிஎஸ்சி தகவல் குரூப் 4-ல் அடங்கிய 3,682 இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் எம். விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தி: குரூப் 4-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) ஆகிய பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17 முதல் செப்டம்பர் 6 வரை கலந்தாய்வு நடைபெற்றது. இளநிலை உதவியாளர் பதவிக்கான முதல் கட்ட கலந்தாய்வில் 2,708 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1582 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுருக்கெழுத்து தட்டச்சர் (3-ம் நிலை) கலந்தாய்வில் 392 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன அலுவலர் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடை பெறும். இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

GK IN TAMIL | வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.


மருத்துவ பட்டங்கள்

ஆண்களைப் பற்றிய மருத்துவ படிப்பு - ஆன்ட்ராலஜி

பெண்களைப் பற்றிய படிப்பு - கைனகாலஜி

குழந்தை மருத்துவம் - பீடியாட்ரிக்ஸ்

முதியோர் நலன் - ஜிரியாடிரிக்ஸ்

மகப்பேறு - ஆப்ஸ்டெட்ரிக்ஸ்

தோல் பற்றியது - டெர்மடாலஜி

காது, மூக்கு, தொண்டை பற்றியது - ஒட்டோரைனோல ரிஞ்சியாலஜி

புற்றுநோய் பற்றியது - ஆன்காலஜி

உடல்செயல்பாடுகள் - பிஸியாலஜி

மூளை, மண்டையோடு - பிரினாலஜி

பற்கள் - ஒடன்டாலஜி

 

மாதிகளின் பெயர்கள்

சாந்திவனம் - நேரு

சக்திஸ்தல் - இந்திராகாந்தி

வீர்பூமி - ராஜீவ்காந்தி

விஜய்காட் - லால்பகதூர் சாஸ்திரி

கிஸான்காட் - சரண்சிங்

நாராயண்காட் - குல்சாரிலால் நந்தா

அபாய்காட் - மொரார்ஜி தேசாய்

 

5 வகை உயிர்கள்

* மனிதர்களும், விலங்குகளும் மட்டும் உயிரினங்கள் என்று எண்ணிவிடாதீர்கள். 5 வகையான உயிரினங்கள் பூமியில் உள்ளன. அவை தாவரம், விலங்கு மற்றும் மொனிரா, புரோடிஸ்டா, பூஞ்சை என வகைப்படுத்தப்படுகிறது.

* மொனிரா தொகுதி ஒரு செல் புரோகேரியாட்டுகள் எனப்படுகின்றன. பாக்டீரியா, நீலப்பசும்பாசி போன்றவை இந்த தொகுதியைச் சேர்ந்தவை.

* புரோடிஸ்டா தொகுதி ஒரு செல் யூகேரியாட்டுகள் எனப்படுகின்றன. அமீபா, யூக்ளினா, பாராமீசியம் போன்றவை இந்த தொகுதி உயிரினங்களாகும்.

* பூஞ்சைகள் செல் சுவருள்ள பச்சையமற்ற யூகேரியாட்டுகள் ஆகும்.

* தாவரங்கள் செல் சுவரும், பச்சையமும் உள்ள யூகேரியாட்டுகள் ஆகும்.

* விலங்குகள் செல்சுவரற்ற, பச்சையமற்ற யூகேரியாட்டுகள் ஆகும். மனிதன் விலங்கு தொகுதியைச் சேர்ந்தவன்.

* இந்த ஐந்து வகை உயிரின தொகுதியிலும் சேராதது வைரஸ்கள்.

* உயிரினங்களை ஐந்து தொகுதிகளாக வகைப்படுத்தியவர் ராபர்ட் விடேகர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.


1. தமிழகத்தின் முதல் கற்கோவில் என்ற சிறப்பை பெறும் ஆலயம் எது?

2. விமானங்கள் பறக்கும் வளிமண்டல அடுக்கு எது?

3. சந்திரயானில் இருந்த எந்தக் கருவி நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது?

4. பட்டா முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

5. 23½ டிகிரி தென் அட்சக்கோடு எப்படி அழைக்கப் படுகிறது?

6. டெர்பி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர் புடையது?

7. இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் ஒரே சுரங்கம் எது?

8. நந்திக் கலம்பகம் நூல் யாரைப் பற்றி பாடப்பட்டுள்ளது?

9. ஈராக் நாட்டின் பழைய பெயர் என்ன?

10. நிலவைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?

11. 'தி அனிமல்' என்று அழைக்கப்பட்ட விளையாட்டு வீரர் யார்?

12. வங்காள பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யார்?

13. தமிழகத்தில் சட்டமேலவை எப்போது கலைக்கப்பட்டது?

14. ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய பெண்மணி யார்?

15. பிரம்மஞான சபையை தொடங்கியவர்கள் யார்?

விடைகள் :

1. கூரம் சிவன் கோவில், 2. ஸ்டிரடோஸ்பியர், 3. எம்-3, 4. ஷெர்ஷா, 5. மகர ரேகை, 6. குதிரைப் பந்தயம், 7. ஜடுகுடா (ஜார்க்கண்ட்), 8. மூன்றாம் நந்தி வர்மன், 9. மெசபடோமியா, 10. செலினாலஜி, 11. எட்மண்டோ, (பிரேசில் கால்பந்து வீரர்), 12. கர்ஸன், 13. 1986, 14. மேரி லீலா ராவ், 15. ஜெனரல் ஆல்காட் மற்றும் மேடம் பிளாவட்ஸ்கி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.


குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்தவர்கள் முதல் 6 இடங்களை பிடித்தனர் | துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-1 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. முதல் 6 இடங்களை சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்தவர்கள் பெற்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை சூப்பிரண்டுகள், 21 வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்த வருடம் முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வைலட்சம் பேர் எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்த தேர்வில் 2 ஆயிரத்து 926 பேர் பங்கேற்றனர். முதன்மை தேர்வு முடிவு மே 12-ந்தேதி வெளியானது. இதில் 148 பேர் தேர்வு ஆனார்கள். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு சென்னை பிராட்வே அருகில் உள்ள டி.என்.பி. எஸ்.சி. அலுவலகத்தில் 7-ந் தேதி முதல் நேற்று வரை நடந்தது. முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் களை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் முதல் 6 இடங்களை பெருநகர சென் னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர் கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். அவர்களின் பெயர் விவரங் கள் வருமாறு:- 1. காயத்ரி சுப்பிரமணியன், மாங்காடு. 2. பி. மணிராஜ், திருவொற்றியூர். 3. டி.தனப்பிரியா, நாமக் கல். 4. சுரேந்திரன், தேனி. 5. ஸ்ரீதேவி, நாமக்கல். 6. ஜெகதீசுவரன், டி.கல்லுப்பட்டி. இவர், செங்கல்பட்டு சப்-கலெக்டர் ஜெயசீலன் தம்பி ஆவார். ஜெயசீலனும் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவசமாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரி திருநங்கை வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதால் குரூப்-1 தேர்வை ரத்து செய்ய கோரி திருநங்கை வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு | டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் திருநங்கை வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், போலீஸ் கமிஷனரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட ஐகோர்ட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த திருநங்கை சுவப்னா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல பதவிகளுக்கு, குரூப்-1 தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்பின்னர் இந்த குரூப்-1 தேர்வு அதே ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நான் கலந்துகொண்டு, அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். இதன்பின்னர், இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் முதன்மை தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்தியது. இந்த தேர்விலும் நான் கலந்துகொண்டு நன்றாக எழுதியிருந்தேன். ஆனால், தேர்வில் நான் தேர்ச்சிப் பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்தது. இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதையடுத்து முதன்மை தேர்வில் நான் எழுதிய விடைத்தாளின் நகலை கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அதை தர டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மறுத்து விட்டது. இந்த நிலையில், குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியது. அதில், குரூப்-1 தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள்களை அந்த தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்டது. தேர்வு முடிந்த பின்னர், எழுதப்படாத அல்லது பூர்த்திச் செய்யப்படாத விடைத்தாள்களை, தாங்கள் விரும்பும், தேர்வில் பங்கேற்ற நபர்களுக்கு கொடுத்து, அதில் அவர்களை விடை எழுதச் சொல்லி, அதன் மூலம் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. அதனால், குரூப்-1 தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள்களை அந்த தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து பெற்று, இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். குரூப்-1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த தேர்முகத் தேர்வுக்கு தடை விதிக்கவேண்டும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த குரூப்-1 முதன்மை தேர்வை ரத்து செய்யவேண்டும். இந்த தேர்வை வெளிப்படையான முறையில் மீண்டும் நடத்த டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல் நிறைமதி, 'தொலைக்காட்சியில் வெளியான விடைத்தாள்கள் உண்மையானது இல்லை. அவை சித்தரிக்கப்பட்டவை' என்று கூறினார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், 'தொலைக்காட்சியில் வெளியான விடைத்தாள்கள் அனைத்தும் உண்மையானது. டி.என்.பி.எஸ்.சி. கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டிய விடைத்தாள்கள் எப்படி வெளியில் சென்றது? இதுகுறித்து விசாரிக்க வேண்டும். இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது' என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 'இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதற்குள் இந்த வழக்கில், சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் தனியார் தொலைக்காட்சியை எதிர்மனுதாரர்களாக, மனுதாரர் சேர்க்கவேண்டும்' என்று உத்தரவிட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE