டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது | கடைசி நாள் 7.1.2017

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது | டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் இந்து சமய அறநிலையத் துறைக்கான தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. எழுத்து தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி., இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை 3 மற்றும் செயல் அலுவலர் நிலை 4, ஆகிய பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வுக்கான விளம்பரம் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தகுதி இந்து மதத்தை சேர்ந்த ஆண்-பெண் அனைவரும் இந்த தேர்வை எழுதாலம். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நிலை 4 தேர்வையும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நிலை 3 தேர்வையும் எழுதாலம். இத்தேர்வுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் வருகிற 24-ந் தேதி ஆகும். தேர்வு நடைபெறும் நாள் 30.4.2017. பயிற்சி வகுப்புகள் இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.7 ஆயிரம் ஆகும். இந்த பயிற்சி வகுப்பில் பொதுத்தமிழ் மற்றும் பொதுஅறிவு ஆகிய பிரிவுகளில் தமிழ்மொழி வாயிலாக மட்டும் பயிற்சி வழங்கப்படும். 35 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளின் போது எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க அனுமதியில்லை. தங்கும் வசதி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. உணவு தங்கும் வசதி மற்றும் பேருந்து வசதி கட்டணம் மொத்தம் ரூ.7 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பில் சேர.... பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.7 ஆயிரத்துக்கான 'டிமாண்ட் டிராப்ட்' (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம் -628216, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். விடுதிக்கான தொகை ரூ.7 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாளான 18.1.2017 அன்று நேரில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 7.1.2017 ஆகும். பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் தகவல்களுக்கு 04639-242998, 9442055243., 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.