உதவி சிறை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு


உதவி சிறை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு | இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 24.07.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 12611 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 217 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.06.2017 முதல் 02.06.2017 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION PRESS RELEASE The Written Examination for the post of Assistant Jailor in Tamil Nadu Jail Subordinate Service was held on 24.07.2016 FN & AN. Totally 12611 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 217 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website "www.tnpsc.gov.in". The Certificate Verification will be held from 01.06.2017 to 02.06.2017 at the Commission's office. M. VIJAYAKUMAR, I.A.S., Secretary & Controller of Examinations (I/c.)இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.